சமூகம் காலம் காலமாக பெண் குரல்களை நசுக்கியே வந்திருக்கிறது. உயிர்க்காற்று தவிர வேறெதற்கும் பெண் வாய் திறந்திடாவண்ணம் அவளது குரல்வளையை காலமும் சூழலும் சமூகமும் நெறித்துக் கொண்டேதான் இன்னமும் இருக்கின்றன. தனி வெளியோ, பொது வெளியோ, எங்காகினும் பெண்ணின் பார்வை உள்நோக்கியதாகவே, சுயத்தை, தன் குடும்பத்தை, தன் உறவுகளை நோக்கியே சிந்திக்கவும் ஆசிக்கவும் கட்டமைத்திருக்கிறது, ஆயிரமாயிரம் ஆண்டுகால அடிமைத்தளை இது. தளை உடைக்கவும் சுவாசிக்கவும் பெண்ணுக்குத் தேவை ஒரு துளி விடுதலை உணர்வு, கொஞ்சமே கொஞ்சம் தனக்கான வெளி. அந்த வெளியில் அவளுடன் இணைந்து பறக்கத் தயாராக இருக்கும் கூட்டுப் புழுக்கள் ஒன்று கூடினால்? தங்கள் கதைகளை அவை தங்களுக்குள் பேசி, ஒருவரை ஒருவர் தாங்கினால், ஏந்திப் பிடித்தால், கை கொடுத்து சிறகு தடவினால்..? பறக்கலாம். வானை வசப்படுத்தலாம்! ஆம்... கதைகள் பேச இதுவே வெளி, தளையை உடைக்க இதுவே களம். வெற்றிகொள்ள இதுவே உரம்! Her Stories... இது நம் வெளி, நம் கதைகள், நம் வெற்றி. இணைந்து பறப்போம். பட்டாம்பூச்சிகளாவோம்!
பதின்பருவப் பெண்ணில் தொடங்கி எந்த வயதிலும் படிக்கக்கூடிய அற்புத நூல்கள் பலவும் இங்கு உண்டு. பெண்ணியம், வரலாறு, தன் வரலாறு, அறிவியல், பயணம், நம்பிக்கை, வாழ்வியல், இலக்கியம், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு என எல்லாமே! மிக முக்கியமாக... ஆண்களும் ஆண்குழந்தைகளும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் நிறையவே உண்டு!
This is a text area. Click here to edit the text.